Thursday, December 10, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் இரண்டாம் தாள் - ஒரு மதிப்பெண் வினா-விடை

ஒரு மதிப்பெண் வினா-விடைகள்
(வினா எண் 1-10)
(10 மதிப்பெண்)
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.        இளவழகன் வந்தான்.  இது வெளிப்படை தொடர்.
2.        மாடு என்னும் சொல் அஃறிணைப் பொதுப்பெயர்  ஆகும்.
3.        மாடு கன்றை ஈன்றது. இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும்
4.        வடக்கு என்னும் திசைப்பெயரொடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
5.        மேற்கு நாடு என்பது மேனாடு எனச் சேரும்.
6.        கருமை  குழி  என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின் படி  புணரும்.
7.        பொருளிலக்கணம் இரண்டு வகைப்படும்.
8.        அகத்திணைகள். ஏழு .வகைப்படும்.
9.        மார்கழி, தை ஆகிய இரண்டும் முன்பனிக் காலத்திற்குரியன.
10.     மருதநிலத்திற்குரிய தெய்வம் ந்திரன்
11.     பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா, பருந்து
12.     புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.
13.     மண்ணாசைக் கருதிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை
14.     பாடாண்திணை என்பது ஆண்மகனின் ஒழுகலாறுகள்  கூறுவது
15.     ஒரு தலைக்காமம் என்பது கைக்கிளை
16.     தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது காஞ்சி .ஆகும்.
17.     உலகு என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன் வாய்பாடு பிறப்பு
18.     நல்லவை – இச்சொல் அலகிட்டால் நேர்நிரை எனப் பிரியும்.
19.     நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீராய் வரும்
20.     ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர்  ஏகாரத்தில் முடிவது சிறப்பு
கூடுதல் வினாக்கள்      (பொதுத்தேர்வு வினாக்கள்)
21.     கீழ்வருவனவற்றுள் பொதுமொழி அந்தமான்
22.     கீழ்வருவனவற்றுள் பெயரெச்சத் தொடரை எடுத்து எழுதுக படித்த கயல்விழி
23.     கீழ்வருவனவற்றுள் இனங்குறித்தல் சொல்லை எடுத்து எழுதுக கதிர்வேல் வெற்றிலை தின்றான்
24.     எதிர்கால இடை நிலை அமைந்த வினைமுற்று படிப்பான்
25.     தனிமொழியைத் தேர்ந்தெடு கண்
26.     ஒருபொருட் பன்மொழியைத் தேர்ந்தெடு  நடுமையம்
27.     வடக்கு கிழக்கு எவ்வகைப் புணர்ச்சி என்று கூறுக திசைப்பெயர்ப்புணர்ச்சி
28.     தலைவன் – இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ஐகாரக் குறுக்கம்
29.     ஒரு பொருட்பன்மொழியைத் தேர்ந்தெடு – குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன.
30.     எதிர்கால இடைநிலை அமைந்த வினைமுற்று – வருவான்
31.     ஈற்றில் ஐகாரம் குறைந்து வரும் சொல் திண்ணை
32.     பொதுமொழியைத் தேர்ந்தெடு – தாமரை
33.     ஒரு பொருட்பன்மொழிக்கு எடுத்துக்காட்டு – உயர்நதோங்கிய மரம்
34.     குறிஞ்சி நிலத்துப் பறவைகள் கிளி, மயில்
35.     வரும் வண்டி – இச்சொற்களில் வரும் குறுக்கம் மகரக் குறுக்கம்
36.     கலா கலகலவெனச் சிரித்தாள் இதில் கல கல என்பது இரட்டைக்கிளவி
37.     சிறப்பு என்னும் சொல் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன் வாய்பாடு பிறப்பு ஆகும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக
38.     பூங்குழலி பொம்மை செய்தாள். இத்தொடரைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது, பொம்மை பூங்குழலியால் செய்யப்பட்டது  என வரும்.
39.     அழகன் பாடம் எழுதுகிறான்.  இத்தொடரில், ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் தனிநிலைத். தொடர் ஆகும்.
40.     அன்பரசன் திருக்குறளைக் கற்றான்.  இத்தொடர் பிறவினையாக மாறும்போது, அன்பரசன் திருக்குறளைக் கற்பித்தான் ன வரும்.
41.     ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி
42.     தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல்
43.     வினைமுற்று  .தெரிநிலை, குறிப்பு என இருவகைப்படும்.
44.     ஓர் எச்ச வினை பெயரைக் கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
45.     ஒரு பொருள் குறித்துவரும் சொற்களையே ஒரு பொருட்பன்மொழி .என்பர்
46.     ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று நடுமையம்.
47.     இது செய்வாயா என்னும் வினாவிற்கு வயிறு வலிக்கும் எனக் கூறுவது உறுவது கூறல் விடை.
48.     ஆடத் தெரியுமா என்னும் வினாவிற்குப் பாடத் தெரியும் எனக் கூறுவது இனமொழி விடை.
49.     நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது கொளல் வினா.
50.     அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம் ஆகும்.
51.     குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்தும்  அன்பின் ஐந்திணை எனப்படும்
52.     நெய்தல் திணைக்குரிய நிலப்பகுதி கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.
53.     யாமம் என்பது இரவு 10 மணிமுதல் இரவு 2 மணி  வரை ஆகும்.
54.     மருதம், நெய்தல் ஆகிய இரண்டனுக்கும் ஆறு பெரும்பொழுதுகளும் வரும்.
55.     திருமால் முல்லை நிலத்திற்குரிய தெய்வம்.
56.     மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும் மருதம்  திணைக்குரிய பறைகள்.
57.     நெய்தல் திணைக்குரிய தொழில் .மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் .ஆகும்.
58.     நேரிசை வெண்பா இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும வரும்.
59.     இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தானும் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா .ஆகும்.
60.     வெண்பாவின் ஓசை செப்பலோசை ஆகும்.
61.     ஆசிரியப்பாவின் வேறு பெயர் அகவற்பா ஆகும்.
62.     ஆசிரியப்பாவின் ஓசை அகவலோசை ஆகும்

கூடுதல் வினாக்கள் (பொதுத்தேர்வு வினாக்கள்)
63.     மரவேர் என்பது கெடுதல் விகாரம் ஆகும்.
64.     வேய்புரைதோள் – உவம உருபு புரை
65.     நண்பகல் என்பது பாலை திணைக்குரிய பொழுது ஆகும்.
66.     மொழியமிழ்து – இவ்வுருவகத்திற்கான உவமை அமிழ்துமொழி
67.     வௌவால் – இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
68.     கிளிபோலப் பேசினாள் – இச்சொல்லில் அமைந்த உவம உருபு  போல
69.     மாலை என்பது முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ஆகும்.
70.     மரவடி – இச்சொல்லில் அமைந்துள்ள புணர்ச்சி மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகும்.
71.     இது செய்வாயா? என்ற வினாவிற்கு, நீயே செய் என்பது ஏவல்விடை
72.     தேன்போன்ற மொழி – இதில் உள்ள உவம உருபு போன்ற
73.     முஃடீது – இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ஆய்தக்குறுக்கம்
74.     படித்து வந்தான் – இதில் படித்து என்பது வினையெச்சம் ஆகும்.
75.     முழவு உறழ் தடக்கை – இதில் உள்ள உவம உருபு உறழ்
76.     இந்திரன் மருதம் நிலத்திற்குரிய தெய்வம்.
77.     செம்மொழி பண்புப்பெயர்ப் புணர்ச்சி ஆகும்.
78.     நிரை கவர்தல் வெட்சி என்னும் புறத்திணைக்குரியது.
79.     உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணி ஆகும்.
80.     விடை எட்டு வகைப்படும்.
81.     மலரன்ன சேவடி – இதில் அமைந்துள்ள உவம உருபு அன்ன
82.     அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்
83.     செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறும் வெளிப்படையாக உணர்த்துவது தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினைமுற்று.
84.     தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகக் கேட்கும் வினா அறியா வினா
85.     புகழ்வதுபோல பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

(குறிப்பு – கோடிட்ட இடத்தில் உள்ளவை விடைதேர்க-விலும், விடை தேர்க-வில் உள்ள வினாக்கள் கோடிட்ட இடத்திலும் மாற்றியும் கேட்கப்படுகின்றன).

சுருக்கமாக விடையளிக்க
(வினா எண் 11-20)
(மதிப்பெண் 10)
தொடரை மாற்றி அமைக்க
86.     திருக்குறளை  அனைவரும் அறிவர்  -  வினாத்தொடாக மாற்றுக.
எதை அனைவரும் அறிவர்?
திருக்குறளை அனைவரும் அறிவரா?
87.     இமயமலை மிகவும் உயரமானது  -  உணர்ச்சித் தொடராக மாற்றுக.
என்னே! இமயலையின் உயரம்!
88.     கிளி கல்லால் அடிபட்டது – உணர்ச்சித் தொடராக மாற்றுக.
ஐயோ! கிளி கல்லால் அடிபட்டதே!
89.     வாரியார், “குழந்தாய்!  நாள்தோறும் திருவாசகம் படிக்கவேண்டும்’’ என்றார் – அயற்கூற்றாக்குக.
நாள்தோறும் திருவாசகம் படிக்குமாறு வாரியார் குழந்தையிடம் கூறினார்.
90.     நேற்று புயல் வீசியது. மரங்கள் சாய்ந்தன – கலவைத்தொடராக மாற்றுக.
நேற்று புயல் வீசியதால் மரங்கள் சாய்ந்தன

சந்திப்பிழையற்ற தொடராக மாற்றுக.
91.     கயிற்றுகட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.

ஒருமை பன்மை பிழை நீக்குக.
92.     அவன் கவிஞன் அல்ல.
அவன் கவிஞன் அன்று

பிறமொழி சொல்லற்ற தொடராக்குக.
93.     அவர்களிருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது.
அவர்களிடையே இடையே உரையாடல் நடந்தது.

வழுஉச் சொல்லற்ற தொடர் ஆக்குக.
94.     வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே.
95.     எண்ணெ வில அதிகமாகிவிட்டது.
எண்ணெய் விலை அதிகமாகிவிட்டது.
96.     இன்னக்கி ஒரு கிலோ அவரக்கா வாங்கி வந்தேன்.
இன்றைக்கு ஒரு கிலோ அவரைக்காய் வாங்கி வந்தேன்.
97.     கதவ தாப்பாள் போட மறந்துட்டேன்
கதவைத் தாழ்ப்பாள் போட மறந்துவிட்டேன்.

தொகைச் சொற்களை விரித்தெழுதுக.
98.     இருவினை,முத்தமிழ், மூவேந்தர், நானிலம், ஐந்திணை, முக்கனி, இருதிணை, நாற்றிசை
இருவினை          -               தன்வினை, பிறவினை
முத்தமிழ்             -               இயல், இசை, நாடகம்
மூவேந்தர்            -               சேர, சோழ, பாண்டியர்
நானிலம்              -               குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
ஐந்திணை            -               குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
முக்கனி               -               மா, பலா, வாழை
இருதிணை          -               உயர்திணை, அஃறிணை
நாற்றிசை             -               கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

உரிய வேற்றுமை உருபை இணைத்து எழுதுக.
99.     நான் (கு) மழையில் நனைவது பிடிக்கும்.
எனக்கு மழையில் நனைவது பிடிக்கும்.
100.  அண்ணன், தம்பி வீடு (கு) சென்றார்
அண்ணன் தம்பி வீட்டுக்குச் சென்றார்.
101.  மாணவர்கள் (ஐ) வட்டமாக உட்காரச் செய்க.
மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க.
102.  நான் (கு) திருக்குறளில் ஆர்வம் மிகுதி.
எனக்குத் திருக்குறளில் ஆர்வம் மிகுதி
103.  வேல்விழி திருக்குறள் (ஐ) படித்தாள்.
வேல்விழி திருக்குறளைப் படித்தாள்.

இளமைப் பெயர்களைப் பொருத்துக
104.  ஆடு                       -               கன்று
105.  மான்                      -               பிள்ளை
106.  கீரி                          -               குட்டி
107.  சிங்கம்          -               குஞ்சு
108.  கோழி                   -               குருளை

(விடைகள் - ஆட்டுக்குட்டி, மான்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக்குருளை, கோழிக்குஞ்சு)

நிறுத்தற்குறி இடுக.
109.  சட்டத்தை மதிப்போம்; குற்றம் களைந்த வாழ்வை வாழ்வோம்; சட்டம் நம்மை காக்கும்.”
110.  அம்பேத்கர்  ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
111.   தொலைக்காட்சி, குளிரூட்டும் கருவி, செல்பேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன.
112.  ஓட்டுநர், நடத்துநர் முதலான பணிகளுக்கும் உடற்கூறுத் தகுதியுடையவர்கள் மட்டுமே சேர இயலும்.

பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
113.  ஷேத்திரங்கள்தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக.
ஆலயங்கள் தோறும் சென்று சிலைகளை வழிபடுக.
114.  இம்மார்க்கத்தில் யாத்திரை செல்லுங்கள்.
இவ்வழியில் பயணம் செல்லுங்கள்.
115.  இந்த ஷர்ட் மிகவும் காஸ்ட்லியானது.
இந்தச் சட்டை மிகவும் விலைமிக்கது.
116.  நாளை நடக்கவிருக்கும் மேட்சில் இந்தியா கண்டிப்பாக வின் செய்யும்.
நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி அடையும்.
117.  நான் இந்தக் காலேஜின் ஓல்ட் ஸ்டுடண்ட்.
நான் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன்
118.  வேலன் சுயதொழிலில் அதிக இலாபம் ஈட்டினான்
வேலன் தன்தொழிலில் மிக்க வருவாய் ஈட்டினான்
119.  அந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு மிகவும் புதுமையானது
அந்த அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு மிகவும் புதுமையானது.
120.  அனைவரையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அழைப்பு விடுத்தார்.
அனைவரையும் உண்ணாநோன்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலைவர் அழைப்பு விடுத்தார்.
121.  அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச் சிறந்த நிபுணர்
அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச் சிறந்த வல்லுனர்.
122.  அலங்கரித்துக் கொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் எழிலி.
அழகுபடுத்திக் கொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் எழிலி.
123.  இறைவனை நோக்கி யாத்திரை செல்லல் பக்தருக்கான மார்க்கம்.
இறைவனை நோக்கி பயணம் செல்லல் தொண்டருக்கான வழி.
124.  எல்லா ஸ்டூடன்சும் பஸ்ஸில் ஏறி ஸ்கூலுக்குப் போனார்கள்.
எல்லா மாணவர்களும் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குப் போனார்கள்.

உவமைகளைச் சொற்றொடரில் அமைக்க
125.  ஆசிரியர் நடத்திய பாடம் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்தது.
126.  குன்றின்  மேலிட்ட விளக்குப்போல, என் தந்தையின் புகழ் விளங்கியது.
127.  உறவினர் இறந்ததைக் கேட்டு அனலிடைப்பட்ட புழுவைப்போலத் துடித்தேன்.
128.  கடலில் கரைந்த பெருங்காயம் போல, என் அறிவுரை என் நண்பனிடம் வீணானது.
129.  என் எழுதுகோலை இலவு காத்த கிளி போல காத்து வருகிறேன்.
130.  என் தோல்வியால் அடியற்ற மரம்போல வீழ்ந்தேன்.
131.  என் அப்பா மடைதிறந்த வெள்ளம்போல பேசுவார்
132.  என் எழுத்து கல்மேல் எழுத்துபோல அழகாக இருக்கும்.
133.  மழை அத்திப் பூத்தாற்போல பெய்யும்
134.  மழைகாணாப் பயிர்போல என் நண்பன் வருகைக்காகக் காத்திருந்தேன்.
135.  நட்பு என்பது மலரும் மணமும்போல இருக்கவேண்டும்.
136.  வேலியே பயிரை மேய்ந்ததுபோல, நண்பர்களை ஏமாற்றக்கூடாது.
137.  வாலியும் சுக்ரீவனும் கீரியும் பாம்பும்போல இருந்தனர்.
138.  என் தந்தையின் அறிவுரை உள்ளங்கை நெல்லிக்கனிபோல இனித்தது.
139.  கிணற்றுத்தவளைபோல, ஒன்றும் தெரியாமல் வாழதே.
140.  நிலவும் வானமும் போல நட்பாக இரு.

உவம உருபுகளைக் கண்டு எழுதுக
141.  கிளிபோலப் பேசினாள்    -              போல
142.  வேய்புரை தோள்              -               புரை
143.  தாயொப்பப் பேசும் மகள-               ஒப்ப
144.  முழவு உறழ் தடக்கை     -               உறழ்
145.  மலரன்ன சேவடி                -              அன்ன

உவமையை உருவகமாக மாற்றுக.
146.  மதிமுகம்             -               முகமதி
147.  பவளவாய்           -               வாய்ப்பவளம்
148.  மலரடி           -               அடிமலர்
149.  முத்துப்பல்          -               பல்முத்து
150.  மலர்ப்பாதம்        -               பாதமலர்

மரபுத் தொடர் பொருளறிக
151.  ஆயிரங்காலத்துப் பயிர்   -               நீண்ட காலத்திற்குரியது
152.  முதலைக் கண்ணீர்           -               பொய்யழுகை
153.  அவசரக் குடுக்கை             -               எண்ணித் துணியாதார்
154.  ஆகாயத்தாமரை                -               இல்லாத ஒன்று
155.  குட்டிச் சுவர்                        -               பயனின்றி இருத்தல்
156.  சீட்டுக் கிழிந்துவிட்டது    -               வேலை போய்விட்டது
157.  கயிறு திரித்தல்                  -               பொய் கூறுதல்
158.  கொட்டி அளத்தல்              -               மிகுதியாகப் பேசுதல்
159.  பஞ்சாயப் பறத்தல்            -               அலைந்து திரிதல்
160.  இளங்கோவின் குடும்பத்தினர் வாழையடி வாழையாக வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்.
இளங்கோவின் குடும்பத்தினர் பரம்பரைப்பரம்பரையாக வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்.
161.  எம்.ஜி.ராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார்.
எம்.ஜி.ராமச்சந்திரன் திரைவானில் தனிப்புகழோடு விளங்கினார்.

ஒருமை பன்மை நீக்குக
162.  திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக்கருவி என்ற கருவி பயன்படுகின்றன.
திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக்கருவி என்ற கருவி பயன்படுகின்றது.
163.   நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின் விளக்குகள் போல் இருக்கின்றது.
நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின் விளக்குகள் போல் இருக்கின்ற
164.  இன்று பேருந்துகள் ஓடாது.     
இன்று பேருந்துகள் ஓடா.
165.  ஓர் அணில் மரத்தில் ஏறின.    
ஓர் அணில் மரத்தில் ஏறியது.
166.  நான் வாங்கிய நூல் இது அல்ல. 
நான் வாங்கிய நூல் இது அன்று.
167.  பெண்கள் பெற வேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை.
பெண்கள் பெற வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
168.  தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது
169.  ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தாள்.
170.  மனிதனின் நோக்கம் உயர்ந்த்தாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதா.
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது.

தொடருக்கு ஏற்ற வினா அமைக்க.
171.  திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
திரைப்படம் எடுப்பதனைவிட எதை எடுப்பது கடினமான பணியாகும்?
172.  நடிப்புக் கலையையும் அரசியலையும் தம் இருகண்களாக எம்.ஜி.ராமச்சந்திரன் கருதினார்.
நடிப்புக் கலையையும் அரசியலையும் தம் இருகண்களாகக் கருதியவர் யார்?


சொற்களுக்கு இருபொருள் எழுதுக
173.  ஆறு                       -               எண், நதி
174.  திங்கள்          -               கிழமை, மாதம்
175.  மாலை          -               மாலைவேளை, பூமாலை
176.  நகை                      -               சிரிப்பு, அணிகலன்
177.  மெய்                      -               உடல், உண்மை               

மிகும், மிகா  இடம் ஒன்றனுக்குச் சான்று தருக
178.  வல்லினம் மிகும் இடம் ஒன்றனக்குச் சான்று தருக.
அ, இ, உ முன் மிகும்   சான்று - அச்சட்டை
179.  வல்லினம் மிகா இடம் ஒன்றனுக்குச் சான்று தருக
வினைத்தொகையில் மிகாது  சான்று – ஊறுகாய்

உரிய வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
180.  எங்கள் பள்ளிக்குச் சுற்றுச்சுவர். எழுப்பப்பட்டது. (கட்டப்பட்டது, எழுப்பப்பட்டது)
181.  பாரதியார் செய்யுளை இயற்றினார்  (பாடினார், இயற்றினார்)
182.  வேடன்  எய்த அம்பு யானையை வீழ்த்தியது. (எய்த, செலுத்திய)
183.  மாறன் ஓவியத்தை புனைந்தான்  வரைந்தான், புனைந்தான்)
184.  அந்தச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டது .(வடிக்கப்பட்டது, செதுக்கப்பட்டது)

பொருத்துக
185.  மயில்                    -               கரையும்
186.  கூகை                    -               கத்தும்
187.  யானை         -               குழறும்
188.  காகம்                    -               அகவும்
189.  ஆடு                       -               பிளிறும்

(விடைகள் - மயில் அகவும், கூகை குழறும், யானை பிளிறும், காகம் கரையும், ஆடு கத்தும்)


சந்திப் பிழைகளை நீக்கி எழுதுக
190.  தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்.
191.  அறிவு ஒளிபெற அங்கு சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினர்.
192.  ஏழைகளுக்குப் பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார்.
193.  மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகின்றது.

வினையெச்சமாக மாற்றுக
194.  படி, (விடை - படித்து)

பெயரெச்சமாக மாற்றுக
195.  பிரி (விடை - பிரித்த, பிரிக்க, பிரிய)


No comments:

Post a Comment