Friday, August 14, 2015

ஒரு மதிப்பெண் வினாவிடை - 6

காலாண்டு தேர்வுப் பகுதி
ஒரு மதிப்பெண் வினாவிடை
தமிழ் இரண்டாம் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
கோடிட்ட இடம் /நிரப்புதல்
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  25
காலம் 45 நிமிடம்


தொடரை மாற்றி அமைக்க
1.        திருக்குறளை  அனைவரும் அறிவர்  -  வினாத்தொடாக மாற்றுக.
2.        இமயமலை மிகவும் உயரமானது  -  உணர்ச்சித் தொடராக மாற்றுக.
3.        கிளி கல்லால் அடிபட்டது – உணர்ச்சித் தொடராக மாற்றுக.
4.        வாரியார், “குழந்தாய்!  நாள்தோறும் திருவாசகம் படிக்கவேண்டும்’’ என்றார் – அயற்கூற்றாக்குக.
5.        நேற்று புயல் வீசியது. மரங்கள் சாய்ந்தன – கலவைத்தொடராக மாற்றுக.
சந்திப்பிழையற்ற தொடராக மாற்றுக.
6.        கயிற்றுகட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
ஒருமை பன்மை பிழை நீக்குக.
7.        அவன் கவிஞன் அல்ல.
பிறமொழி சொல்லற்ற தொடராக்குக.
8.        அவர்களிருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது.
வழுஉச் சொல்லற்ற தொடர் ஆக்குக.
9.        வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே.

தொகைச் சொற்களை விரித்தெழுதுக.
10.     இருவினை
11.     முத்தமிழ்
12.     மூவேந்தர்
13.     நானிலம்
14.     ஐந்திணை

உரிய வேற்றுமை உருபை இணைத்து எழுதுக.

15.     நான் (கு) மழையில் நனைவது பிடிக்கும்.
16.     அண்ணன், தம்பி வீடு (கு) சென்றார்
17.     மாணவர்கள் (ஐ) வட்டமாக உட்சாரச் செய்க.
18.     நான் (கு) திருக்குறளில் ஆர்வம் மிகுதி.
19.     வேல்விழி திருக்குறள் (ஐ) படித்தாள்.

இளமைப் பெயர்களைப் பொருத்துக
20.     ஆடு            -        கன்று
21.     மான்           -        பிள்ளை
22.     கீரி             -        குட்டி
23.     சிங்கம்         -        குஞ்சு
24.     கோழி          -        குருளை

நிறுத்தற்குறி இடுக.

25.     சட்டத்தை மதிப்போம் குற்றம் களைந்த வாழ்வை வாழ்வோம் சட்டம் நம்மை காக்கும்

1 comment: