Thursday, August 6, 2015

இரண்டாம் அலகுத் தேர்வு - தேர்ச்சிக்கான பகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டம்
இரண்டாம் அலகுத் தேர்வு – 2015
(இயல் 2,3)

ஒரு மதிப்பெண் 

தமிழ் முதல் தாள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                       
1.        இளங்கோவடிகள்......................நாட்டைச் சேர்ந்தவர்.
1.சோழ   2.  சேர   3. பாண்டிய.
2.        நெஞ்சை  அள்ளும்  சிலப்பதிகாரம்  என்று  பாடியவர்...........................
1.        கவிமணி   2.  பாரதிதாசன்  3.  பாரதியார்
3.        குடும்ப  விளக்கு..................படைப்புகளுள்  ஒன்று.
1.  பாரதியார்  2.  பாரதிதாசன்   3. சுரதா
4.        பாரதிதாசனார்......................... என  அழைக்கப் படுகிறார்.
1.        புரட்சிக் கவிஞர்   2.  தேசியக் கவிஞர்    3. உவமைக் கவிஞர்
5.        கம்பராமாயணம்.................காண்டங்களைக்  கொண்ட நூல்.
 1.  ஐந்து   2.  ஆறு    3. மூன்று
6.        சரசுவதி  அந்தாதி ...................................இயற்றிய  நூல்கள்  ஒன்று.
1.  கம்பர்  2.  ஒட்டக்கூத்தர்   3. புகழேந்தி
7.        கம்பரைப் புரந்தவர்..........................
1.        ஔவையார்   2.   புகழேந்தி   3.  சடையப்ப வள்ளல்.
8.        அரசின்  அனைத்துத்  துறைகளிலும்  பெண்கள்  பணியாற்றும்போது நம்  சமுதாயத்தில்  புரட்சி
ஏற்படும்  என்றவர்...................
1.  திரு.வி.க    2. பெரியார்  3. பாரதிதாசன்
9.        பெண்  அடிமை   ஆனதற்கு  உரிய  காரணங்களுள்  ஒன்று.................இல்லை.
1.        வாக்குரிமை  2.  பேச்சுரிமை  3. சொத்துரிமை
10.     மும்பையில்  அம்பேத்கர்  சிறிதுகாலம்.............................பேராசிரியராகப் பணியாற்றினார்.
1.        வாணிகவியல்   2.  அறிவியல்   3. பொருளியல்
11.     அம்பேத்கருக்கு  இந்திய  அரசு   வழங்கிய   விருது.......................
1.        பத்மஸ்ரீ  2. பாரத ரத்னா  3.  பத்ம விபூஷன்

கோடிட்ட இடங்களை நிரப்புக
12.     இரட்டைக்  காப்பியம்  என்பன  சிலப்பதிகாரமும்.........................ஆகும்.
13.     தமிழர்களிடம்  இன்று  பரவியுள்ள.. ................ஒன்று  உண்டு.
14.     பெரியார்  சமூக ................எதிர்த்தவர்.   மூடக்கருத்துகளை.........................

பொருத்துக.
15.     புகார்க் காண்டம்                                -               13  காதைகள்
16.     மதுரைக் காண்டம்            -               7   காதைகள்
17.     வஞ்சிக் காண்டம்              -               10  காதைகள்
18.     இடர்                              -               நிலவு
19.     நாவாய்                         -               துன்பம்
20.     இறை                            -               படகு
21.     இந்து                             -               தலைவன்

விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக.
22.     பெண்கள்  உரிமை  பெற்றுப்  புது  உலகைப்  படைக்கவேண்டும்  என்று  விரும்பியவர்  பெரியார்.
23.     பெரியார்  பெண்ணுரிமைக்கு  ஊறுவிளைவிக்கும் பழைய  நம்பிக்கைகளை  ஏற்க  மறுத்தார்.



தமிழ் இரண்டாம் தாள் 

உரிய  விடையைத்  தேர்ந்தெடுத்து  எழுதுக                                             
1.        இளவழகன்  வந்தான்.   இது ........................தொடர்.
1.        குறிப்பு     2.  வெளிப்படை   3. எதுவுமில்லை.
2.        மாடு  என்னும்  சொல் ....................... ஆகும்.
1.        உயர்திணைப் பொதுப்பெயர்   2.  அஃறிணைப்  பொதுப்பெயர்   3.  விரவுப்பெயர்
3.        மாடு  கன்றை  ஈன்றது.  இத்தொடரில்  மாடு  என்பது.................குறிக்கும்
1.        பசு    2. காளை   3. கன்று

கோடிட்ட  இடங்களை  நிரப்புக
4.        ஒரு  சொல்  தனித்து  நின்று  பொருள்  தருவது...................................
5.        தொழிலைக்  குறிக்கும்  சொல்.................................
6.        வினைமுற்று  ..........................., .............................. என  இருவகைப்படும்.
7.        ஓர்  எச்ச வினை ...............கொண்டு  முடிந்தால்,  அது  பெயரெச்சம்  எனப்படும்

சீர் எதுகையை  அடிக்கோடிடுக.
8.        வருக  மற்றவள்  தருக  ஈங்கென.
9.        நற்றிறம்  படராக்  கொற்கை  வேந்தே.

சீர் மோனையை  அடிக்கோடிடுக.
10.     கள்வனைக்  கோறல்  கடுங்கோ  லன்று.
11.     யானோ  அரசன்  யானோ  கள்வன்.
12.     இந்துவின்  நுதலாளோடு  இளவலொ  டினிதேறா

அகரமுதலி  பார்த்துப்  பொருள்  எழுதுக.
13.     இறை,  நாவாய்

சந்திப்பிழை  நீக்கி  எழுதுக.
14.     அனைத்து  துறைகளிலும்  ஆண்களை போலவே  பெண்களுக்கும்  அரசு  பணி  கொடுக்கவேண்டும்.
15.     ஆளும்  அறிவும்  வளர்வதற்கு  முன்பாக  வாழ்க்கை  பயணமாம்.
16.     ஆசிரியர்  பெயரை  தம்  பெயருடன்  சேர்த்து  பீமராவ்  அம்பேத்கராக  மாறினார்.
17.     ஏழைகளுக்கு  பொருள் பெறாமல்  வாதாடி  நீதி  பெற்று  தந்தார்.

ஒருமை,  பன்மை  பிழை  நீக்குக.
18.     கல்வி  நலம்  பெற்ற  பெண்பாற்  புலவர்க்கு  மன்னரும்  பணிந்தான்.
19.     பெண்கள்  பெறவேண்டியது  பெண்கல்வி, பெண்ணுரிமை,  சொத்துரிமை.
20.     இப்போது  அவர்  கையில்  கோப்புகள்  இருந்தது..
21.     வயது  வந்தோர்க்கும்  பெண்களுக்கும்  வாக்குரிமை  கொடுக்கப்படவேண்டுமென  அம்பேத்கர் கூறியதை  நாளேடுகள்  புகழ்ந்தது.

பொருத்துக
22.     வெளிப்படைச் சொற்கள்                 -               சோறு உண்டான்
23.     குறிப்புச் சொல்                                   -               கல், மண்
24.     இனங்குறித்தல்                                  -               மாடு பால் கறந்தது.

 வாழ்க்கைத் திறன்

மாறன்  பத்தாம்  வகுப்புப்  படிக்கின்றான்.  சில  நாட்களாக  அவனுடைய செயல்களில் மாற்றம்  ஏற்பட்டிருப்பதைப்  பெற்றோர்  உணர்ந்தனர்.  பள்ளி நேரம் முடிந்ததும் அவன் வீட்டிற்குத் தாமதமாக வருகின்றான்.  காரணம் கேட்டால், உண்மையைச் சொல்ல மறுக்கின்றான். வீட்டில் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றான். நல்ல நண்பர்களுடன் அவன் பழகாததே இதற்குக் காரணம் என்ற பெற்றோர் நினைக்கின்றனர்.

1.   பெற்றோர் மாறனைப் பற்றி நினைப்பது சரியா?
2.    நாம் எப்படிப்பட்ட நண்பர்களோடு நட்புகொள்ள வேண்டும்?

உரிய வேற்றுமை உருபை இணைத்து எழுதுக.
3.        நான் (கு) மழையில் நனைவது பிடிக்கும்.
4.        அண்ணன், தம்பி வீடு (கு) சென்றார்
5.        மாணவர்கள் (ஐ) வட்டமாக உட்காரச் செய்க.
6.        நான் (கு) திருக்குறளில் ஆர்வம் மிகுதி.
7.        வேல்விழி திருக்குறள் (ஐ) படித்தாள்.


இளமைப் பெயர்களைப் பொருத்துக
8.        ஆடு                       -               கன்று
9.        மான்                      -               பிள்ளை
10.     கீரி                          -               குட்டி
11.     சிங்கம்          -               குஞ்சு
12.     கோழி                   -               குருளை

நிறுத்தற்குறி இடுக.
13.     சட்டத்தை  மதிப்போம்   குற்றம் களைந்த வாழ்வை வாழ்வோம் சட்டம் நம்மை காக்கும்.
14.     அம்பேத்கர்  ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம்  சமத்துவம்  சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது  என்றார்.
15.      தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி  செல்பேசி  கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன.
16.     ஓட்டுநர்  நடத்துநர் முதலான பணிகளுக்கும் உடற்கூறுத் தகுதியுடையவர்கள்  மட்டுமே சேர இயலும்.

பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
17.     ஷேத்திரங்கள்தோறும்  சென்று  விக்கிரகங்களை  வழிபடுக.
18.     இம்மார்க்கத்தில்  யாத்திரை  செல்லுங்கள்.
19.     இந்த  ஷர்ட்  மிகவும்  காஸ்ட்லியானது.
20.     நாளை  நடக்கவிருக்கும்  மேட்சில்  இந்தியா  கண்டிப்பாக  வின்  செய்யும்..
21.     நான் இந்தக்  காலேஜின்  ஓல்ட்  ஸ்டுடண்ட்.
இணையான பழமொழிகளை எழுதுக.
22.    Charity  begins at home.
23.    Covet all lose all
24.    Diamonds cut diamonds.
25.    East are west, Home is the best
26.    Empty vessels make the greatest sound.
27.    Money makes many things

28.    Slow and steady wins the race.


சிறுவினா

1.  பெண்கல்வி குறித்துப் பெரியார்   கருத்துகள்  யாவை?
2. பெண்ணுரிமையை  விளக்குக.
3. மணக்கொடை  குறித்துப்  பெரியார் கூறுவன   யாவை?
4.  கம்பராமாயணம் - சிறு குறிப்பு வரைக.
5. சீதை, இலக்குவன்  ஆகியோரிடம்  குகனைப்  பற்றி  இராமன்   கூறியதென்ன?
6.  விருத்தமாதவரை  நோக்கி  இராமன்  கூறியவை  யாவை?

கடிதம்

1.  பத்தாம் வகுப்புப்   பொதுத்  தேர்வில்  முதல்  மதிப்பெண்  பெற்ற   உன்  நண்பனைப்
      பாராட்டிக்  கடிதம் எழுதுக.
2.  பேருந்துவசதி  வேண்டிப்  போக்குவரத்துக் கழ மேலாண்மை இயக்குநர்க்குக்  கூட்டு விண்ணப்பம்  வரைக.

கட்டுரை  
1. சிக்கனமும் சேமிப்பும்  



தேர்ச்சிக்கான  பகுதி,

1.  ஒரு மதிப்பெண்                                                                15
2.  கடிதம்                                                                                     8
3. சிறுவினா                                                                               2
4. கட்டுரை                                                                                  5

        ஆகிய  பகுதிகளில்  30  மதிப்பெண்ணிற்குப் பயிற்சி அளித்தாலே  தேர்வாளர் தேர்ச்சி  அடைய வாய்ப்புண்டு.




No comments:

Post a Comment