ஒரு மதிப்பெண் வினா விடை
(செய்யுளும் உரைநடையும்)
(வினா எண் 1 – 20)
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(வினா எண் 1-6)
(6 மதிப்பெண்)
1.
திருக்குறளைப்
போற்றிப்பாடும் நூல் திருவள்ளுவமாலை
2.
திருக்குறள் குறள்
வெண்பாக்களால் ஆனது.
3.
இணையில்லை முப்பாலுக்கு
இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன்
5.
கணிமேதாவியாரின்
காலம். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
6.
மருந்துப்
பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி
7.
இளங்கோவடிகள் சேர
நாட்டைச் சேர்ந்தவர்.
8.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
என்று பாடியவர் பாரதியார்
9.
குடும்ப விளக்கு பாரதிதாசன்
படைப்புகளுள் ஒன்று.
10. பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என
அழைக்கப்படுகிறார்.
11. கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்ட நூல்
12. சரசுவதி அந்தாதி கம்பர் இயற்றிய
நூல்களுள் ஒன்று.
13. கம்பரைப் புரந்தவர் சடையப்ப வள்ளல்.
14. நல் என்னும அடைமொழி பெற்ற நூல் நற்றிணை
15. நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
16. நற்றிணை எட்டுத்தொகை நூல்களைச் சார்ந்தது.
17. சேக்கிழார் பெருமான் அருளியது பெரியபுராணம்
18. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர்
எனப் பெயர் சூட்டியவர் அப்பூதியடிகள்
19.
பக்திச் சுவைநனி
சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரனார்.
20. திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் மூத்த
அறிவுடையார்
21. அரியவற்றுள் எல்லாம் அரிது பெரியார் பேணித்
தமராக் கொளல்.
22. முதலிலார்க்கு ஊதியம் இல்லை.
23. திருநாவுக்கரசர் காலம்
கி.பி.7 ஆம் நூற்றாண்டு.
24.
நாமார்க்கும்
குடியல்லோம் என்னும் பாடல் பாரதியாரை அச்சமில்லை அச்சமில்லை எனப்
பாடத் தூண்டியது.
25. சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.
26. “கேழல்“ என்பதன் பொருள் பன்றி
27. கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள்
ஒன்று.
28. நெய்தல்கலியைப் பாடியவர் நல்லந்துவனார்
29. போற்றாரைப் பொறுத்தல் என்பது பொறை எனப்படும்.
30. பெருமாள் திருமொழியில் நூற்றைந்து பாசுரங்கள்
உள்ளன.
31. குலசேகர ஆழ்வார் பாடல் முதலாயிரத்தில்
உள்ளது.
32. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக்
கூறியவர் பாவாணர்
33. இன்றைய மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இருந்தது.
34. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம்
சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர் பெரியார்.
35. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை
இல்லாமை
36. மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம் பொருளியல்
பேராசிரியராகப் பணியாற்றினார்.
37. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது பாரத
ரத்னா.
38. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை பேச்சுக்
கலை
39. தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுபவர் திரு.வி.க.
40. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் தேவாரம்.
41. உலகம் என்னும் தமிழ்ச்சொல் உலவு என்னும்
சொல்லின் அடியாகப் பிறந்தது.
42. தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக்
காட்டியிருக்கிறார்கள்.
43. காந்தியடிகள் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து
உண்மையே பேசவேண்டும் என்று உறுதி பூண்டார்.
44. பகைவனிடம் அன்பு காட்டு எனக் கூறிய நூல் பைபிள்
45. அறநெறியாகப் போற்றப்படவேண்டியவை அன்பு, அருள்.
46. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்
பெற்றுள்ள நூல் பெரியபுராணம்
47. வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கர்.
48. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி பன்னிரண்டாம்
வகுப்பு.
49. விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் பாடலின் ஆசிரியர் தாராபாரதி.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
(வினா எண் 7-12)
(6 மதிப்பெண்)
50. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
திருவாதவூர்.
51. மாணிக்கவாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில்
இடம்பெற்றுள்ளன.
52. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் திருப்பெருந்துறையில்
உள்ளது.
53. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம்
தலைமையமைச்சராகப் பணியாற்றினார்
54. ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கில மொழியில்
மொழிபெயர்த்தார்.
55. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்
உருகார்.
56. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன் விரையார்
கழற்கு.
57. கைதான் நெகிழ விடேன். இதில் நெகிழ என்பது தளர
என்னும் பொருளில் வந்துள்ளது.
58. திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330
குறட்பாக்களும் உள்ளன.
59. திருக்குறள் ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன்
முதலான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
60. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
61. இறுவரை காணின் கிழக்காம் தலை
62. மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் உரவோர்.
63. நூல்நோக்கி வாழ்வான் நுனித்து
64. இரட்டைக் காப்பியம் என்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
ஆகும்.
65. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங் காப்பியங்கள் ஆகும்.
66. வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப.
67. தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
68. இருந்த வள்ளலைக் காண
வந்தெய்தினான்
69. இடருற மறையோரும் எரியுறு
மெழுகானார்.
70. நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு
அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்.
71. அரி என்னும் சொல்லின் பொருள் நெற்கதிர்
72. கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப்
புலவர்களுள் ஒருவர்.
73. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
74. வளம்மருவும் நிழல்தரும் தண்ணீர்ப்
பந்தர் வந்தணைந்தார்.
75. சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும்
தாங்கண்டார்.
76. போலிப்புலவர்கள் தலையில் குட்டுபவர் அதிவீரராம
பாண்டியன்
77. நால்வகைப் பாக்களும் வயலுக்கு வரப்புகளாக அமைந்துள்ளன.
78. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்.
79. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி
வந்த பொருள்.
80. அருளொடும் அன்பொடும் வாராப்
பொருளாக்கம்
81. உறுபொருளும் உல்குபொருளுமந்
தன் ஒன்னார்.
82. திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.
83. திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் தேவாரம் என
வழங்கப்படுகிறது.
84. தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் திருநாவுக்கரசர்.
85. சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்
86. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
87. கலம்பகம் தொண்ணூற்றாறு வகைச்
சிற்றிலக்கியங்களில் ஒன்று.
88. பணை என்னும் சொல்லின் பொருள் மூங்கில்.
89. தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி
போன்றிருந்தேனே.
90. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி
குலசேகரர் பாடியதாகும்.
91. தமிழர் மனித வாழ்வை அகம், புறம் எனப்
பிரித்தனர்.
92. குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசியமொழி தமிழ்.
93. 2004 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில்
தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு
அறிவித்தது.
94. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்சுமுல்லர்.
95. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள் பெருநோய் ஒன்று
உண்டு.
96. பெரியார் சமூக முரண்களையும் மூடக்கருத்துகளையும்
எதிர்த்தவர்.
97. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும்
வேறுபாடு உண்டு.
98. பேச்சு முடிவில் சுருக்கத்தைக் கூறிக்
கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்.
99. நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் இயக்குநர்
என அழைப்பர்.
100. படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில்
பொருத்துவதும் உண்டு.
101. இயங்குருப் படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
102. இலெமூரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர்.
103. தனக்குவமையில்லா ஒரு தனி இனம் தமிழ் இனம்.
104. காந்தியடிகள் சிரவண பிதுர்த்தி என்னும் நாடக
நூலைப் படித்தார்.
105. இன்னா செய்தார்க்கும் என்னும் திருக்குறளை மொழிபெயர்த்த
உருசிய அறிஞர் தால்சுதாய்.
106. இராமலிங்கர் சத்திய தருமசாலையை நிறுவிய இடம் வடலூர்
107. இராமலிங்கர் தமிழ் மொழியே இறவாநிலை தரும்
என்று கருதினார்.
108. சங்க காலத்தில் பெண்கள் கடல் கடந்து
செல்லக்கூடாது.
109. நாள்தோறும் கல்வியில் புதுப்புதுத் துறைகள்
உருவாகிக் கொண்டிருக்கின்றன.
110. காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும் எழுத்துத்
தேர்வும் உண்டு.
பொருத்துக
(வினா எண் 13-16)
(4 மதிப்பெண்)
111. விரை - மணம்
கழல் - அணிகலன்
ததும்பி - பெருகி
மெய்- உடல்
112. இடர் - துன்பம்
நாவாய் - படகு
இறை - தலைவன்
இந்து - நிலவு
113. செறு - வயல்
வித்து - விதை
யாணர் - புதுவருவாய்
வட்டி - பனையோலைப்பெட்டி
114. மேதி - எருமை
சந்தம் - அழகு
கோதில் - குற்றமில்லாத
அங்கணர் - சிவன்
115. கான் - காடு
உழுவை - புலி
மடங்கல் - சிங்கம்
எண்கு - கரடி
116. பண்பு - பாடறிந்து ஒழுகல்
அன்பு - தன்கிளை செறாஅமை
அறிவு -
பேதையார் சொல் நோன்றல்
செறிவு - கூறியது
மறாமை
117. ஈஸ்ட்மென் - படச்சுருள்
எடிசன் - ஒருவர்
மட்டும் பார்க்கும் படக்கருவி
எட்வர்ட் மைபிரிடச - இயக்கப்படம்
வால்ட் டிஸ்னி - கருத்துப்படம்.
118. சத்தியசோதனை - காந்தியடிகள்
பகவத் கீதை - இந்து சமய நூல்
திருக்குறள் - திருவள்ளுவர்
பைபிள் - கிறித்துவ சமய நூல்
119. வினையே ஆடவர்க்கு உயிர் - குறுந்தொகை
முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை - தொல்காப்பியம்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமூலர்
விரல்கள் பத்தும் மூலதனம் - தாராபாரதி.
விடைக்கேற்ற வினா அமைக்க
(வினா எண் 17-20)
(4 மதிப்பெண்)
120. பெண்கள் உரிமைப் பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று
விரும்பியர் பெரியார்.
விடைகள்
1.
பெண்கள் உரிமைப்
பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியர் யார்?
2.
பெரியார் எதை விரும்பினார்?
121. பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறு விளைவிக்கும் பழைய
நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார்.
விடைகள்
1.
பெண்ணுரிமைக்கு ஊறு
விளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர் யார்?
2.
பெரியார் எதை ஏற்க மறுத்தார்?
122. செய்திப் படங்களின் வாயிலாக நிகழ்வுகளை நம்
இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்
விடைகள்
1.
எப்படங்களின்
வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்?
2.
செய்திப் படங்களின்
வாயிலாக நிகழ்வுகளை எங்கிருந்து கண்டு களிக்கலாம்?
123. திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி
பயன்படுகிறது.
விடைகள்
1.
திரையரங்குகளில்
திரைப்படம் காட்ட எக்கருவி பயன்படுகிறது?
2.
திரையரங்குகளில்
எதைக் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது?
124. தமிழர்கள் அரபு நாட்டுடனும் யவன நாட்டுடனும் வாணிகத்
தொடர்புகொண்டிருந்தார்கள்
விடைகள்
1.
தமிழர்கள் எந்தெந்த
நாட்டுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்தார்கள்?
2.
தமிழர்கள் அரபு நாட்டுடனும்
யவன நாட்டுடனும் என்ன தொடர்புகொண்டிருந்தார்கள்?
125. காந்தியடிகள் பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும்
வாழ்வாதாரம் கதர் என்று கருதினார்
விடைகள்
1.
காந்தியடிகள் பலகோடி
மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் என்று எதைக் கருதினார்?
2.
பலகோடி மக்களின்
பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் கதர் என்று கருதியவர் யார்?
126. இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும்
தெய்வப்பற்றும் வளரும் வகையில் கல்வி
அமைதல்வேண்டும்.
விடைகள்
1.
இளைஞர்களின்
உள்ளத்தில் எத்தகைய பற்றுகள் வளரும் வகையில்
கல்வி அமைதல்வேண்டும்?
2.
இளைஞர்களின்
உள்ளத்தில் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் தெய்வப்பற்றும் வளரும் வகையில் எது அமைதல்வேண்டும்?
127. இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இளங்கலைக் கல்வியியல் பட்டம்
பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
விடைகள்
1.
இளங்கலைப் பட்டம்
பெற்றவர்கள் இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் எப் பணியில் சேரலாம்?
2.
எப்பட்டங்கள்
பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்?
பொதுத்தேர்வு வினாக்கள்
128. தமிழர் மனித வாழ்வை அகம், புறம் எனப் பிரித்தனர்.
விடைகள்
1.
தமிழர் மனித வாழ்வை
எவ்வாறு பிரித்தனர்?
2.
மனித வாழ்வை அகம்,
புறம் எனப் பிரித்தவர் யார்?
129. மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது.
விடைகள்
1.
எப்பேச்சு மிகுந்த
பயனைத் தரவல்லது?
2.
மிகுந்த பயனைத்
தரவல்லது எது?
130. இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் வடலூர்.
விடைகள்
1.
இராமலிங்கர் சத்திய
தருமச்சாலையை நிறுவிய இடம் எது?
2.
வடலூரில் சத்திய
தருமச்சாலையை நிறுவியவர் யார்?
131. தொடக்கம், இடைப்பகுதி, முடிவு பேச்சின் முக்கூறுகள்
விடை: பேச்சின்
முக்கூறுகள் யாவை?
132. உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்
விடை: உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றவை எவை?
133. இலெமூரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர்
விடை: மனித நாகரிகத் தொட்டில் எது?
134. இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஈராண்டுகள் ஆகும்.
விடை: இடைநிலை ஆசிரியர் பயிற்சி எத்தனை ஆண்டுகள்?
135. நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது
தொல்காப்பியம்.
விடை: நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?
136. ஆசிரியர் என்பவர் அறிவுக் கடலாக மட்டுமின்றி, அறத்தின்
ஆழியாகவும் விளங்க வேண்டும்.
விடை: ஆசிரியர் எப்படி விளங்கவேண்டும்?
137. இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்புப்
போன்றவை.
விடை: இலக்கியக்கூறுகள் எதைப் போன்றவை?
138. திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் தால்சுதாய்
விடை: திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் யார்?
139. வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால்
மனிதநேயம் மலரும்.
விடை: வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் எது
மலரும்?
140. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர்
விடை: அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர் யார்?
141. இலக்கணம் வகுத்தபின்பே இலக்கியம் தோன்றியது
விடை: இலக்கணம் வகுத்தபின்பு எது தோன்றியது?
142. இராமலிங்கர் தமிழ்மொழியே இறவாத நிலை தரும் என்றார்.
விடை: தமிழ்மொழியே இறவாதநிலை தரும் என்றவர் யார்?
143. தொழில்நுட்பப்பயிலகத்தில் பயில்வோர்க்கு நிறைய
வேலைவாய்ப்புகள் உள்ளன.
விடை: எதில் பயில்வோர்க்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன?
144. தமிழர்கள் நிலத்தை ஆறுவகையாகப் பிரித்துக்
காட்டியிருக்கிறார்கள்.
விடை: நிலத்தை ஆறுவகையாகப் பிரித்துக்காட்டி இருப்பவர்கள் யார்?
145. பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
விடை: செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?
146. 1918இல் மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம் பொருளியல்
பேராசிரியராகப் பணியாற்றினார்.
விடை: 1918இல் மும்பையில் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராகப்
பணியாற்றியவர் யார்?
147. வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம்.
விடை: வள்ளலாரின் இயற்பெயர் என்ன?
148. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி மேனிலைக்கல்வித்
தேர்ச்சி ஆகும்.
விடை: பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி எது?
149. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைநத அரிய கலை பேச்சுக்கலை
விடை: நுண்ணிய நூல் பல கற்றவர்க்கு அமைந்த அரிய கலை எது?
150. இராமலிங்கர் இறையருள் பெற்ற திருக்குழந்தை என்று
பாராட்டப்பட்டார்
விடை: இறையருள் பெற்ற திருக்குழந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்?
151. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
விடை: உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?
152. நடிப்புக் கலையையும் அரசியலையும் தம் இரு கண்களாக்க்
கருதினார் எம்.ஜி.ராமச்சந்திரன்.
விடை: எவற்றைத் தம் இரு கண்களாக எம்.ஜி.ராமச்சந்திரன் கருதினார்?
153. திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது
கடினமாகும்.
விடை: திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமாகும்?
No comments:
Post a Comment