காலாண்டு தேர்வுப்
பகுதி
ஒரு மதிப்பெண்
வினாவிடை
தமிழ் இரண்டாம் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
காலம் 45 நிமிடம்
தமிழில் எழுதுதல்
1.
டாடி, வர்ற சண்டெ எனக்குப் பர்த்டே, நீங்க இன்னும் எனக்குப்
பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே, வொய் டாடி? என்னோட பிரண்ட்ஸையெல்லாம் வீட்டுக்கு
வரச்சொல்லிக் கால் பண்ணியிருக்கேன்.
சண்டெ வர்றதுக்கு
இன்னும் ஸிக்ஸ் டேஸ் இருக்கு. டோன்ட் வொர்ரி, டுமாரோ ஈவினிங் ஷாப்பிங் போகலாம். இப்ப உனக்கு ஹேப்பிதானே.”
2.
சுரேஷ் வாட் ஹேப்பண்ட்? ஏன் லேட்டா வர்றே? வழியிலே ஒரே
டிராபிக் ஜாம்டா, அதனால்தான் லேட்.
சரி...சரி..பஸ் எத்தனை மணிக்கு வரும்? டிக்கெட் கிடைச்சுதா?
பஸ் டென்
தேர்ட்டிக்கு வரும். லாஸ்ட் வீக்கே
ரிசர்வ் செய்தாச்சு.
சந்திப் பிழைகளை நீக்கி எழுதுக
3.
தமிழில் வரலாற்று கருத்துக்களையும், பண்பாட்டு கூறுகளையும்
காணமுடியும்.
4.
அறிவு ஒளிபெற அங்கு சோதி தரிசன புதுமையை புகுத்தினர்.
5.
ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
6.
மனித இனத்தின் மரபு செல்வமாக தமிழ்மொழி விளங்குகின்றனது.
சூழல்
வினா விடை
7.
மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கின்றான். சில நாட்களாக
அவனுடைய செயல்களில் மாற்றம்
ஏற்பட்டிருப்பதைப் பெற்றோர் உணர்ந்தனர்.
பள்ளி நேரம் முடிந்ததும் அவன் வீட்டிற்குத் தாமதமாக வருகின்றான். காரணம் கேட்டால், உண்மையைச் சொல்ல
மறுக்கின்றான். வீட்டில் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றான். நல்ல
நண்பர்களுடன் அவன் பழகாததே இதற்குக் காரணம் என்ற பெற்றோர் நினைக்கின்றனர்.
பெற்றோர் மாறனைப்
பற்றி நினைப்பது சரியா?
நாம் எப்படிப்பட்ட
நண்பர்களோடு நட்புகொள்ள வேண்டும்?
இச்சூழலில்
பயன்படுத்தவேண்டிய வாழ்வியல் திறன்கள் யாவை?
8.
இரண்டு நாள் பெய்த மழையின் காரணமாக, அன்று பள்ளிக்கு
விடுமுறை அறிவிக்கிறார்கள். பள்ளிக்கு வந்த மாணவர்கள் தத்தம் வீட்டிற்குத்
திரும்புகிறார்கள். ஆனால் கதிரவனின் வகுப்புத் தோழர்கள், அவனைத் திரைப்படம்
பார்க்க வருமாறு அழைக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரிந்தால் தன்னைக்
கண்டிப்பார்கள் என்று கதிரவனுக்குத் தெரியும்.
திரைப்படத்திற்குச் செல்லாவிடில் நண்பர்கள் தன்னை ஒதுக்கி விடுவார்கள்
என்று அவன் நினைக்கிறான்.
இந்நிலையில் கதிரவன்
தன் மனவெழுச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவான்?
கதிரவன் நிலையில்
நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?
9.
பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து சில நாள் ஆகிறது. தேவி அன்று பள்ளிக்குப் போகாமல் அழுது
கொண்டிருந்தாள். அவள் கண்கள் இரண்டும் சிவந்துவிட்டன. ஆனால் அவள் பெற்றோர் அவளின் அழுகையைப் பொருட்படுத்தவில்லை..
“நான்சொன்னது சொன்னதுதான். நீ படித்தது போதும். இன்னும் மூன்று மாதத்தில் உனக்குத்
திருமணம் செய்யவேண்டியதுதான்.“ என்று கூறியவாறு அவளுடைய தந்தை வெளியே
சென்றுவிட்டார். “அப்பா உனக்கு நல்லதுதான் செய்வார். அப்பாவின் பேச்சைக் கேள்“
என்று அம்மாவும் கூறவே, என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்துடன் இருந்தாள் தேவி.
இத்தகைய நிலையில்
தேவி எத்தகைய முடிவெடுப்பாள்?
உங்களுக்கு
இப்படியொரு நிலை ஏற்பட்டால் நீங்கள் எப்படி தீர்வு காண்பீர்கள்?
இச்சூழலில்
பயன்படுத்தவேண்டிய வாழ்வியல் திறன்கள் யாவை?
No comments:
Post a Comment