பத்தாம் வகுப்பு – தமிழ்
ஆண்டு பொது ஆயத்தத் தேர்வு
20
புறவய வினாக்கள்
பயிற்சி ஏடு / வினாத்தாள் ஏடு
இயல் - 1
வாழ்த்து
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
மாணிக்கவாகசகர் பிறந்த ஊர்...........................
2.
மாணிக்க வாசகர் பாடல்கள்.................திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
3.
மாணிக்கவாசகர் கட்டிய கோவில்..................................உள்ளது.
4.
மாணிக்கவாசகர்........................மன்னரிடம் தலைமையமைச்சராகப்
பணியாற்றியவர்.
5.
ஜி.யு.போப் திருவாசகத்தை.................மொழியில் மொழிபெயர்த்தார்.
6.
திருவாசகத்திற்கு உருகார்..........................உருகார்.
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
7.
மெய்தான்.........(அரும்பி / அறும்பி) விதிர்விதிர்த்துன்
....................................(விரையார் / விறையார்) கழற்கு.
8.
கைதான் நெகிழவிடேன். இதில் நெகிழ என்பது.........................(தலர / தளர) என்னும் பொருளில்
வந்துள்ளது.
பொருத்துக.
சொல் பொருள்
9.
விரை - உடல்
10.
கழல் - பெருகி
11.
ததும்பி - மணம்
12.
மெய் - அணிகலன்
திருக்குறள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
13.
திருக்குறளில்...............அதிகாரங்களும்...........குறட்பாக்களும் உள்ளன.
14.
திருக்குறள்..........................முதலான உலக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
15.
ஒழுக்கத்தின் எய்துவர்...............இழுக்கத்தின்
எய்துவர் ..................பழி.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
16.
திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
1.
நால்வர் நான்மணிமாலை 2.
திருவள்ளுவமாலை 3. இரட்டைமணிமாலை
17.
திருக்குறள் .................வெண்பாக்களால் ஆன நூலாகும்.
1. சிந்தியல்
2. குறள் 3. நேரிசை
18.
இணையில்லை முப்பாக்கு இந்நிலத்தே – எனப் பாடியவர்
1.
பாரதியார் 2. சுரதா 3. பாரதிதாசன்
உரிய சொல்லைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
19.
இறுவரை காணின் ..............................(கிழக்காம் / கிளக்காம்)
தலை.
20.
மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல்.......................(உரவோர் / உறவோர்)
அடி எதுகையை தேர்ந்தெடுத்து எழுதுக.
21.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
சீர் மோனையை அடிக்கோடிடுக.
22.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விடுபட்ட சீர்களை எழுதுக.
23.
பரிந்தோம்பிக்
.............................ஒழுக்கம்..........................
தேரினும்..........................துணை
24.
ஊக்கம் உடையான்............................பொருதகர்
தாக்கற்குப்.....................தகைத்து.
உவமையைப் பொருளொடு பொருத்தி எழுதுக.
25.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று
26.
கொக்கொக்க கூம்பும் பருவத்து
சீர் பிரித்து எழுதுக.
27.
ஒழுக்கமுடைமைகுடிமைஇழுக்கம்இழிந்தபிறப்பாய்விடும்.
28.
காலங்கருதியிருப்பர்கலங்காதுஞாலங்கருதுபவர்.
ஏலாதி
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
29.
ஏலாதி ...................................நூல்கள் ஒன்று.
1.
பதினெண்மேற்கணக்கு 2. பதினெண்கீழ்க்கணக்கு 3. காப்பியம்
30.
கணிமேதாவியாரின் காலம்..........................
1.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு 2. கி.பி.
நான்காம் நூற்றாண்டு 3. கி.பி.ஐந்தாம்
நூற்றாண்டு
31.
மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்.....................,
1.
திருக்குறள், நன்னூல் 2.
திரிகடுகம், ஏலாதி 3. நற்றிணை, அகநானூறு
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
32.
நூ.........(ல் ள்) நோக்கி
வா...............(ழ் ள்) வான் நு..............த்து (னி / ணி)
இயல் 2
சிலப்பதிகாரம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
33.
இரட்டைக் காப்பியம் என்பன சிலப்பதிகாரமும்.........................ஆகும்.
34.
சிலப்பதிகாரம். மணிமேகலை,................வளையாபதி........................என்பன
ஐம்பெருங்காப்பியங்கள்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
35.
இளங்கோவடிகள்......................நாட்டைச் சேர்ந்தவர்.
1.சோழ
2. சேர 3. பாண்டிய.
36.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்...........................
1.
கவிமணி 2. பாரதிதாசன்
3. பாரதியார்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
37.
வா........தல் (ல் ழ்) வே.........டி
(ண் ன்) ஊழ்வினை து..........ப்ப (ற / ர)
38.
தா...ந்த (ள் ழ்) குடையன் தளர்..த (ன் ந்)
செங்கோ...........ன் (ள / ல)
39.
திருவாசகத்திற்கு உருகார்..........................உருகார்.
சீர் எதுகையை அடிக்கோடிடுக.
40.
வருக மற்றவள் தருக ஈங்கென.
41.
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே.
சீர் மோனையை அடிக்கோடிடுக.
42.
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று.
43.
யானோ அரசன் யானோ கள்வன்.
பொருத்துக.
44.
புகார்க் காண்டம் - 13 காதைகள்
45.
மதுரைக் காண்டம் - 7
காதைகள்
46.
வஞ்சிக் காண்டம் - 10 காதைகள்
-
15 காதைகள்
தமிழ் வளர்ச்சி
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
47.
குடும்ப விளக்கு..................படைப்புகளுள் ஒன்று.
1.
பாரதியார் 2. பாரதிதாசன்
3. சுரதா
48.
பாரதிதாசனார்......................... என அழைக்கப் படுகிறார்.
1.
புரட்சிக் கவிஞர் 2. தேசியக்
கவிஞர் 3. உவமைக் கவிஞர்
இயல் 3
கம்பராமாயணம்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
49.
இரு........த (ன்/ ந்) வ....ளலைக் (ல் / ள்) கா...வந் (ன/ ண)
தெய்தினா........(ன் / ண்).
50.
இடரு...(ர/ ற) ம...யோரும் (றை / ரை) எ....யுறு (ரி/ றி)
மெ.....கானார். (ழு / ளு).
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
51.
கம்ப ராமாயணம்.................காண்டங்களைக் கொண்ட நூல்.
1. ஐந்து
2. ஆறு 3. மூன்று
52.
சரசுவதி அந்தாதி ...................................இயற்றிய நூல்கள் ஒன்று.
1.
கம்பர் 2. ஒட்டக்கூத்தர் 3. புகழேந்தி
53.
கம்பரைப் புரந்தவர்..........................
1.
ஔவையார் 2. புகழேந்தி
3. சடையப்ப வள்ளல்.
உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
54.
மட அன்னக் கதியது செல
சீர் மோனையை எடுத்துதெழுதுக.
55.
இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா
அகரமுதலி பார்த்துப் பொருள் எழுதுக.
56.
இறை, நாவாய்
பொருத்துக
57.
இடர் - நிலவு
58.
நாவாய் - துன்பம்
59.
இறை - படகு
60.
இந்து - தலைவன்
இயல் 4
நற்றிணை
கோடிட்ட இடங்களை நிரப்புக
61.
நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும்.......பேரெல்லையும்
கொண்ட நூல்.
62.
அரி என்னும் சொல்லின் பொருள்................
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
63.
நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்
1.அகநானூறு
2. கலித்தொகை 3. நற்றிணை
64.
நற்றிணையைத் தொகுப்பித்தவர்.........................
பன்னாடு தந்த மாறன் வழுதி 2.
இளம்பெருவழுதி 3. உக்கிரப் பெருவழுதி
65.
நற்றிணை.................நூல்களைச் சார்ந்தது.
1.
பத்துப்பாட்டு 2. எட்டுத்தொகை 3. பதிணென்கீழ்க்கணக்கு
பொருத்துக
66.
செறு - பனையோலைப்பெட்டி
67.
வித்து - புதுவருவாய்
68.
யாணர் - விதை
69.
வட்டி - வயல்
இயல் 5
பெரிய புராணம்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
70
சேக்கிழார் பெருமாள் அருளியது..........................
1. சிவபுராணம்
2. பெரியபுராணம் 3. தலபுராணம்
71.
சரதம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப்பெயர்
சூட்டியவர்.......
1.
அப்பூதியடிகள் 2. மாறநாயனார்
3. திருநீலகண்டர்
72.
பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர்...................
1. பெ. சுந்தரனார் 2. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் 3. கவிஞர் வெ. ராமலிங்கனார்
கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை வகையை எழுதுக.
73.
அளவில்சனம் உளமனைய குளம்நிறைந்த வளமருவும்
74.
கடிதணைந்த அடிபணியா முடிவில்தவம் வடிவுடையீர்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
75.
வ.....ம்மருவும் (ல/ள) நி.....ல்தரும்
(ள/ழ)தண்..ர்ப் (நீ/ ணீ) பந்தர்
வந்த........ணைந்தார் (ணை/னை).
76.
சந்தமு....(ர/ ற) வ.....ந்ததனை (றை / ரை) எம்ம....ங்கும்(ரு/று) தாங்க....டார். (ன் /ண்).
பொருத்துக
77.
மேதி - சிவன்
78.
சந்தம் - எருமை
79.
கோதில் - அழகு
80.
அங்கணர் - குற்றமில்லாத பசு
இயல் 6
தமிழ் விடு தூது
கோடிட்ட இடங்களை நிரப்புக
81.
போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்.........................
82.
நால்வகைப்பாக்களும் வயலுக்கு................அமைந்துள்ளன.
இயல் 7
திருக்குறள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
83.
இல்லாரை................எள்ளுவர்.
84.
அறனீனும் இன்பமும் ஈனும்..............................தீதின்றி வந்த பொருள்.
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
85.
அரு...... டும் (ளொ/லொ) அ....பொடும் (ண்/ன்) வா...ப் (ரா/றா) பொரு...க்கம்.(லா /ளா).
86.
உ...பொருளும் (று/ ரு) உ.....கு (ல்/ள்) பொருளு..... (ன்/ந்) தன் ஒ....னார். (ண் /ன்).
விடுபட்ட சீர்களை எழுதுக.
87.
அறனறிந்து ............................அறிவுடையார்..........................
திறனறிந்து..........................கொளல்
88.
பொருளென்னும்............................,
......................இருளறுக்கும்
எண்ணிய..................... .............................
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
89.
திறனறிந்து தேர்ந்துகொள்ள வேண்டியவர்
1.அன்புள்ள பெற்றோர் 2. ஆர்வமுள்ள நண்பர் 3. மூத்த அறிவுடையார்
90.
அரியவ்ற்றுள் எல்லாம் அரிது.........................பேணித் தமராக் கொளல்
1.
சிறியவர் 2. பெரியவர்
3. உறவினர்
91.
முதலிலார்க்கு.........................இல்லை.
1.
ஊதியம் 2. நட்பு
3. பகை
தேவாரம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
92.
திருநாவுக்கரசர் தமக்கையார்.........................ஆவார்.
93.
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள்.................என வழங்கப்படுகிறது.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
94.
திருநாவுக்கரசர் காலம்.....................ஆம் நூற்றாண்டு.
1.கி.பி.12
2. கி.பி.7 3. கி.பி. 9
95.
நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல்..........................அச்சமில்லை
அச்சமில்லை எனப் பாடத் தூண்டியது.
1.
பாரதிதாசனை 2. சுரதாவை
3. பாரதியாரை
இயல் - 8
சீறாப்புராணம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
96.
சீறாப்புராணத்தை இயற்றியவர்...........................
97.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்..................
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
98.
சீறாப்புராணம்.................காண்டங்களை உடையது.
1.
மூன்று 2. ஐந்து 3. ஏழு
99.
கேழல் என்பதன் பொருள்.............
1.
எருமை 2. புலி
3. பன்றி
யார், யாரிடம் கூறிய தொடர் இது?
100. வென்றி வாளரசே
101. வெறொரு காட்டினிற் புகுக
உவமையைப் பொருளொடு பொருத்துக
102. எழிலிரு புயமும் குன்று
போலுற வீங்கின
சீர்மோனையை எழுதுக.
103. மன்ற லுன்றிய முகம்மதின்
மலரடி வணங்கி
அடி எதுகையை எழுதுக
104. நீண்ட வால்நிலம் புடைத்திடக்
கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்ப
பொருத்துக
105. கான் - கரடி
106. உழுவை - சிங்கம்
107. மடங்கல் - புலி
108. எண்கு - காடு
இயல் - 9
நந்திக்கலம்பகம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
109. கலம்பகம்
.....................வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று..........
1.
தொன்னூற்றாறு 2. பதினெட்டு
3. பத்து
110. பனை என்னும் சொல்லின்
பொருள்.............
1.
அரசு 2. ஆல்
3. மூங்கில்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
111. தார்வேந்தன் கோல்நோக்கி
வாழும் .....................போன்றிருந்தேனே.
112. நாலாயிரத் திவ்விய
பிரபந்தத்தில்...................குலசேகரர் பாடியதாகும்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக.
113. பெருமாள்
திருமொழியில்.........................பாசுரங்கள் உள்ளன.
1.
இருநூற்றைந்து 2. நூற்றைந்து 3. நூறு
114. குலசேகராழ்வார்
பாடல்.................................தொகுப்பில் உள்ளது
1.
திருவியற்பா 2. முதலாயிரம் 3. பெரிய திருமொழி
உரைநடைப்பகுதி
இயல் - 1
உயர்தனிச் செம்மொழி
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
தமிழர் மனித வாழ்வை ................,
................ எனப் பிரித்தனர்.
2.
குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசியமொழி.........................
3.
2004 ஆம் ஆண்டு...................திங்கள் தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு
அறிவித்தது.
4.
தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல்
அறிஞர்......................ஆவார்..
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
5.
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக்
கூறியவர்....................
1.
திரு.வி.க 2. உ.வே.சா 3. பாவாணர்
6.
இன்றைய மதுரையில்...................................தமிழ்ச்சங்கம் இருந்தது.
1.
மூன்றாம் 2. இரண்டாம்
3. முதலாம்
இயல் - 2
பெரியாரின் பெண்விடுதலைச்
சிந்தனைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
7.
தமிழர்களிடம் இன்று பரவியுள்ள.. ................ஒன்று உண்டு.
8.
பெரியார் சமூக ................எதிர்த்தவர்.
மூடக்கருத்துகளை.........................
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
9.
அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில்
புரட்சி
ஏற்படும் என்றவர்
1.
திரு.வி.க 2. பெரியார் 3. பாரதிதாசன்
10.
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று.................இல்லை.
1.
வாக்குரிமை 2. பேச்சுரிமை
3. சொத்துரிமை
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக.
11.
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்
பெரியார்.
12.
பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார்.
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
13.
அனைத்து துறைகளிலும் ஆண்களைபோலவே பெண்களுக்கும் அரசு பணி கொடுக்கவேண்டும்.
14.
ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கை பயணமாம்.
ஒருமை, பன்மை பிழை நீக்குக.
15.
கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தான்.
16.
பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை.
இயல் – 3
அண்ணல் அம்பேத்கர்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
17.
மும்பையில் அம்பேத்கர்
சிறிதுகாலம்.............................பேராசிரியராகப் பணியாற்றினார்.
1.
வாணிகவியல் 2. அறிவியல்
3. பொருளியல்
18.
அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய
விருது.......................
1.
பத்மஸ்ரீ 2. பாரத ரத்னா 3.
பத்ம விபூஷன்
ஒருமை, பன்மை பிழை நீக்குக.
19.
இப்போது அவர் கையில் கோப்புகள் இருந்தது..
20.
வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்படவேண்டுமென அம்பேத்கர்
கூறியதை நாளேடுகள் புகழ்ந்தது.
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
21.
ஆசிரியர் பெயரை தம் பெயருடன் சேர்த்து பீமராவ் அம்பேத்கராக மாறினார்.
22.
ஏழைகளுக்கு பொருள்பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
இயல் - 4
பேச்சுக்கலை
கோடிட்ட இடங்களை நிரப்புக
23.
வெறும் பேச்சுக்கும்................பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
24.
பேச்சு முடிவில்.......................கூறிக் கருத்தினை நிலைநாட்டி
முடித்தல்வேண்டும்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
25.
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை.....
1.
ஓவியக்கலை 2. இசைக்கலை
3. பேச்சுக்கலை
26.
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர்...............
1.
பேரறிஞர் அண்ணா 2. மு.வரதராசனார் 3. திரு.வி.க
ஒருமை, பன்மை பிழை நீக்குக.
27.
புலவர் பொங்கற் புது நாள்களின் மாண்பினை உணர்ந்துகொண்டாடினார்.
28.
மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றது
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
29.
மேடை பேச்சு மிகுந்த பயனை தரவல்லது.
30.
மக்களை இலட்சிய பார்வையிலே அழைத்து செல்லும் வண்மையுடையதே மேடை பேச்சு.
இயல் - 5
பெரியாரின் பெண்விடுதலைச்
சிந்தனைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
31.
நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும்.. ..............என
அழைப்பர்.
32.
படப்பிடிப்புக் கருவியை...............................பொருத்துவதும் உண்டு.
33.
இயங்குருப் படங்கள் பார்ப்பதற்கு..............அழகாக இருக்கும்.
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
34.
திரைபடம் எடுக்க பயன்படும் படசுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
35.
திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
ஒருமை, பன்மை பிழை நீக்குக.
36.
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
37.
இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக.
38.
செய்திப் படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.
39.
திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளிஒலிப் படக்கருவி பயன்படுகிறது.
தேவையான இடங்களில் நிறுத்தற்குறியிடுக.
40.
கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள் செய்திப்படங்கள்
விளக்கப்படங்கள் கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி
நிலைகளைத் திரைப்படத்துறை எட்டியுள்ளது.
பொருத்துக
41.
ஈஸ்ட்மன் - ஒருவர் மட்டும் பார்க்கும் கருவி
42.
எடிசன் - படச்சுருள்
43.
எட்வர்ட் மைபிரிட்சு - கருத்துப்படம்
44.
வால்ட் டிஸ்னி - இயக்கப்படம்
இயல் - 6
தொன்மைத் தமிழகம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
45.
இலெமுரியாவை................................நாகரிகத் தொட்டில் என்பர்.
46.
தனக்குவமையில்லா ஒரு...............தமிழ் இனம்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
47.
பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்..
1.
திருவாசகம் 2. திருக்குறள் 3. தேவாரம்
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
48.
மனித இனத்தின் மரபு செல்வமாக தமிழ்மொழி விளங்குகிறது
ஒருமை, பன்மை பிழை நீக்குக.
49.
புகாவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடந்தது.
50.
தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக.
51.
தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு
கொண்டிருந்தார்கள்.
இயல் - 7
தமிழ் மொழியில்
அறிவியல் சிந்தனைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
52.
உலகம் என்னும் தமிழ்ச்சொல்...............................என்னும் சொல்லின்
அடியாகப் பிறந்தது.
1.
உலகு 2. உலவு 3. உளது
53.
தமிழர்கள் நிலத்தை...........வகையாகப் பிரித்துக்காட்டியிருக்கிறார்கள்.
1.
மூன்று 2. ஆறு 3. ஐந்து
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
54.
தமிழில் வரலாற்று கருத்துகளையும்,
பண்பாட்டு கூறுகளையும் காணமுடியும்.
அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள
வினைப்பகுதியை எச்சமாக்குக.
55.
நன்றாகப்..........(பசி)பின்னர் அளவுடன் உண்ணுதல் வேண்டும்.
56.
தமிழர் நிலத்தை ஐவகையாகப்............(பிரி0 வாழ்ந்திருக்கிறார்கள்.
இயல் - 8 காந்தியம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
57.
காந்தியடிகள்..................................என்னும் நாடக நூலைப்
படித்தார்..
58.
திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர்..........................
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதக
59.
காந்தியடிகள்..............நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசவேண்டும் என்று
உறுதி பூண்டார்.
1.
சிரவணபிதுர்த்தி 2. அரிச்சந்திரன் 3.
பக்தப்பிரகலாதன்
60.
பகைவனிடம் அன்பு காட்டு எனக் கூறிய நூல்........................
1.
பகவத் கீதை 2. நன்னூல் 3. பைபிள்
61.
அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை..........
1.
ஆடம்பரம்,வீண்செலவு 2. எளிமை,
சிக்கனம் 3. அன்பு, அருள்
வினாத்தொடர் அமைக்க
62.
காந்தியடிகள், பல கோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் கதர் என்று
கருதினார்.
63.
இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வப்பற்றும்
வளரும் வகையில் கல்வி அமைதல்வேண்டும்.
தொடர்களின் வகையைக் குறிப்பிடுக.
64.
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒருமுறை பார்த்தார்.
65.
இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயலல்லவா?
ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக
66.
ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
67.
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதா.
பொருத்துக
68.
சத்திய சோதனை - திருவள்ளுவர்
69.
பகவத் கீதை - கிறித்தவ சமய நூல்
70.
திருக்குறள் - காந்தியடிகள்
71.
பைபிள் - இந்து சமய நூல்
இயல் - 9
திருவருட் பிரகாச வள்ளலார்
கோடிட்ட இடங்களை நிரப்புக
72.
இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம்..............
73.
இராமலிங்கர் தமிழ் மொழியே..........................தரும் என்று கருதினார்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதக
74.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள
நூல்................
1. கந்தபுராணம்
2. சீறாப்புராணம் 3. பெரியபுராணம்
75.
வள்ளலாரின் இயற்பெயர்...................
1. சம்பந்தர்
2. இராமலிங்கர் 3. தாயுமானவர்
சந்திப்பிழை நீக்கி எழுதுக
76.
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
77.
அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசன புதுமையை புகுத்தினார்.
இயல் - 10
பல்துறை வேலைவாய்ப்புகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
78.
சங்க காலத்தில் பெண்கள்.........கடந்து செல்லக் கூடாது.
79.
நால்தோறும் கல்வியில்...................உருவாகிக் கொண்டிருக்கின்றன.
80.
காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு
தேர்வும்........................தேர்வும் உண்டு.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
81.
பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி....................................
1.
பத்தாம் வகுப்பு 2. பன்னிரண்டாம்
வகுப்பு 3. எட்டாம் வகுப்பு
82.
விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் பாடலின் ஆசிரியர்......................
1.
பாரதியார் 2. பாரதிதாசன் 3.
தாரா பாரதி
ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
83.
பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றாள்
84.
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளது.
தேவையான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
85.
தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி செல்பேசி கணினி முதலியவற்றைப்
பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன.
சந்திப்பிழை நீக்குக
86.
கைதொழில் ஒன்றை கற்று கொள்.
87.
பெண்கள் குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டுமெனவும் கடல் கடந்து செல்ல
கூடாதெனவும் கூறி வந்தனர்.
வினாத்தொடர் அமைக்க
88.
இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால்
பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
89.
தொழில் நுட்பப் பயிலகத்தில் பயில்வோர்க்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.
பொருத்துக
90.
வினையே ஆடவர்க்குயிர் - தாராபாரதி
91.
முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை - குறுந்தொகை
92.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - தொல்காப்பியர்
93.
விரல்கள் பத்தும் மூலதனம் - திருமூலர்
இலக்கணப் பகுதி
இயல் - 1
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
பூங்குழலி பொம்மை செய்தாள். இத்தொடரைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது,
பொம்மை......................செய்யப்.............. என வரும்.
2.
அழகன் பாடம் எழுதுகிறான். இத்தொடரில்,
ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் ......................... தொடர்
ஆகும்.
3.
அன்பரசன் திருக்குறளைக் கற்றான்.
இத்தொடர் பிறவினையாக மாறும்போது, அன்பரசன்
திருக்குறளை.............................என வரும்.
தொடரை மாற்றி அமைக்க
4.
திருக்குறளை அனைவரும் அறிவர் -
வினாத்தொடாக மாற்றுக.
5.
இமயமலை மிகவும் உயரமானது - உணர்ச்சித் தொடராக மாற்றுக.
6.
கிளி கல்லால் அடிபட்டது – உணர்ச்சித் தொடராக மாற்றுக.
7.
வாரியார், “குழந்தாய்! நாள்தோறும்
திருவாசகம் படிக்கவேண்டும்’’ என்றார் – அயற்கூற்றாக்குக.
8.
நேற்று புயல் வீசியது. மரங்கள் சாய்ந்தன – கலவைத்தொடராக மாற்றுக.
சந்திப்பிழையற்ற தொடராக மாற்றுக.
9.
கயிற்றுகட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
ஒருமை பன்மை பிழை நீக்குக.
10.
அவன் கவிஞன் அல்ல.
பிறமொழி சொல்லற்ற தொடராக்குக.
11.
அவர்களிருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது.
வழுஉச் சொல்லற்ற தொடர் ஆக்குக.
12.
வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே.
இயல் - 2
கோடிட்ட இடங்களை நிரப்புக
13.
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது...................................
14.
தொழிலைக் குறிக்கும் சொல்.................................
15.
வினைமுற்று
..........................., .............................. என
இருவகைப்படும்.
16.
ஓர் எச்ச வினை ...............கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
தொகைச் சொற்களை விரித்தெழுதுக.
17.
இருவினை
18.
முத்தமிழ்
19.
மூவேந்தர்
20.
நானிலம்
21.
ஐந்திணை
இயல் - 3
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
22.
இளவழகன் வந்தான். இது
........................தொடர்.
1.
குறிப்பு 2. வெளிப்படை
3. எதுவுமில்லை.
23.
மாடு என்னும் சொல் ....................... ஆகும்.
1.
உயர்திணைப்பொதுப்பெயர் 2. அஃறிணைப்
பொதுப்பெயர் 3. விரவுப்பெயர்
24.
மாடு கன்றை ஈன்றது. இத்தொடரில் மாடு என்பது.................குறிக்கும்
1.
பசு 2. காளை 3. கன்று
பொருத்துக
25.
வெளிப்படைச் சொற்கள் - சோறு உண்டான்
26.
குறிப்புச் சொல் - கல், மண்
27.
இனங்குறித்தல் - மாடு பால் கறந்தது.
இயல் - 4
கோடிட்ட இடங்களை நிரப்புக
28.
ஒரு பொருள் குறித்துவரும் சொற்களையே........என்பர்
29.
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று............................
30.
இது செய்வாயா என்னும் வினாவிற்கு வயிறு வலிக்கும் எனக்
கூறுவது.............விடை.
31.
ஆடத் தெரியுமா என்னும் வினாவிற்குப் பாடத் தெரியும் எனக்
கூறுவது..............விடை.
32.
நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது..........வினா.
இயல் - 5
33.
மான் ..........மருளும் பார்வை (உரிய உவமை உருபு இணைத்து எழுதுக)
34.
தொகை உவமைகளை விரிவுவமைகளாக மாற்றி எழுதுக.
1. மதிமுகம்
2. பவளவாய்
35.
விரிவுவமைகளைத் தொகையுவமையாக மாற்றக.
1.
கயல்விழிபோன்ற விழி 2. கிளி போன்ற மொழி
36.
அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
1.
மலப்பாதம் (உருவகமாக)
2.
விழிக்கயல் (உவமையாக)
3.
கனிவாய் (உருவகமாக)
4.
பல்முத்து (உவமையாக)
இயல் - 6
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
37.
வடக்கு என்னும் திசைப்பெயரொடு பிற திசைகள் வந்து சேரும்போது..............
1.
நிலைமொழி ஈறு நீங்கும் 2. நிலைமொழி
ஈறும் மெய்யும் நீங்கும் 3. வருமொழி முதல்
கெடும்.
38.
மேற்கு நாடு .......................எனச் சேரும்.
1.
மேற்கு நாடு 2. மேநாடு 3. மேனாடு
39.
கருமை குழி என்பது .............. எனும் விதிகளின்
படி புணரும்.
1.
ஆதிநீடல், இனமிகல் 2.
தன்னொற்றிரட்டல், இடையுகரம் இ ஆதல்
3.ஈறுபோதல், இனமிகல்
இயல் - 7
கோடிட்ட இடங்களை நிரப்புக
40.
ஒரு அகம், புறம் ஆகிய இரண்டும்..................இலக்கணம் ஆகும்.
41.
குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்தும்............எனப்படும்
42.
நெய்தல் திணைக்குரிய நிலப்பகுதி...........பகுதியாகும்.
43.
யாமம் என்பது இரவு 10 மணிமுதல்.......வரை ஆகும்.
44.
மருதம், நெய்தல் ஆகிய
இரண்டனுக்கும்...........................பெரும்பொழுதுகளும் வரும்.
45.
திருமால்...............நிலத்திற்குரிய தெய்வம்.
46.
மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும்...........திணைக்குரிய பறைகள்.
47.
நெய்தல் திணைக்குரிய தொழில்.................ஆகும்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
48.
பொருளிலக்கணம்...............வகைப்படும்.
1.
இரண்டு 2. மூன்று 3. ஐந்து
49.
அகத்திணைகள்.............வகைப்படும்.
1.
மூன்று 2. ஐந்து 3. ஏழு
50.
மார்கழி, தை ஆகிய இரண்டும்..............காலத்திற்குரியன.
1.
முன்பனி 2.பின்பனி 3. இளவேனில்
51.
மருதநிலத்திற்குரிய தெய்வம்.................
1.
முருகன் 2. திருமால் 3.இந்திரன்
52.
பாலை நிலத்திற்குரிய பறவைகள்...........
1.
கிளி, மயில் 2.நாரை, அன்னம் 3. புறா, பருந்து.
பொருத்துக
53.
குறிஞ்சி - முயல், மான்
54.
முல்லை - புலி, கரடி
55.
மருதம் - முதலை, சுறா
56.
நெய்தல் - எருமை, நீர்நாய்
இயல் - 8
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
57.
புறத்திணைகள்.....................வகைப்படும்.
1.
ஐந்து 2. ஏழு 3.பன்னிரண்டு
58.
நிரைகவர்தல் என்பது.................
1.
கரந்தை 2. வெட்சி 3. உழிஞை
59.
மண்ணாசைக் கருதிப் போருக்குச் செல்வது............
1.
வஞ்சித்திணை 2. காஞ்சித்திணை 3. வாகைத்திணை
60.
பாடாண்திணை என்பது...............கூறுவது
1.
ஆண்மகனின் ஒழுகலாறுகள் 2. பெண்மகளின்
ஒழுகலாறுகள். 3. போரின் தன்மைகள்
61.
ஒரு தலைக்காமம் என்பது...............
1.
அன்பின் ஐந்திணை 2. கைக்கிளை 3. பெருந்திணை
62.
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப்
போரிடுவது...........ஆகும்.
1.
நொச்சி 2. தும்பை 3. காஞ்சி
இயல் - 9
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
63.
உலகு என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன்
வாய்பாடு.......
1.
நாள் 2. காசு 3. பிறப்பு
64.
நல்லவை – இச்சொல் அலகிட்டால்.............எனப் பிரியும்.
1.
நேர் நேர் 2. நிரைநேர் 3. நேர்நிரை
65.
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடி.....................வரும்
1.
நாற்சீராய் 2. முச்சீராய் 3. ஐஞ்சீராய்
66.
ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர்
...................முடிவது சிறப்பு
1.
ஆகாரத்தில் 2. ஏகாரத்தில் 3. ஓகாரத்தில்
கோடிட்ட இடங்களை நிரப்புக
67.
நேரிசை வெண்பா இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்ற..........விகற்பத்தானும்...........விகற்பத்தானும
வரும்.
68.
இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தானும்
வருவது..........ஆகும்.
69.
வெண்பாவின் ஓசை...........ஆகும்.
70.
ஆசிரியப்பாவின் வேறு பெயர்.............ஆகும்.
71.
ஆசிரியப்பாவின் ஓசை......ஆகும்.
விடுபட்ட இடங்களை நிரப்புக
வ.எண் சீர் அசை வாய்பாடு
72. கட / னென்
/ ப ............. புளிமாங்காய்
73. நல்
/ லவை நேர்நிரை .........................
74. எல் / லாம் நேர் நேர் .........................
75. கட / னறிந் / து ................... கருவிளங்காய்
by raa.damodaran@gmail.com
by raa.damodaran@gmail.com
No comments:
Post a Comment