X STD TAMIL II PAPER - ONLINE TEST - CHAP 1
இயல் 1 (எழுத்து)
இயல் 1 (எழுத்து)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
வளையல் - இச்சொல்லில் ஐகாரம் குறைந்து ஒலிக்கும் மாத்திரை
- ஒரு
- இரண்டு
- ஒன்றரை
- மூன்று
ஈற்றில் ஐகாரம் குறைந்து வரும் சொல்
- வளையல்
- கடை
- திண்ணை
- ஐந்து
பல்+தீது என்பது
- பல்தீது
- பற்தீது
- பஃதீது
- பஃறீது
குறுக்கங்கள் ஐகாரக்குறுக்கம், ஓளகாரக்குறுக்கம்,.........ஆய்தக்குறுக்கம் என நால்வகைப்படும்.
- தகரக்குறுக்கம்
- ககரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- பகரக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் என்பதன் சான்று
- முஃடீது
- தலைவன்
- போன்ம்
- வௌவால்
ஓளகாரக்குறுக்கத்திற்கான சான்று
- ஐம்பது
- கஃறீது
- ஔவை
- போன்ம்
மகரக்குறுக்கத்திற்கான சான்று
- கடலை
- வௌவால்
- முஃடீது
- மருள்ம்
ஆய்தக்குறுக்கத்திற்கான சான்று
- கஃறீது, முஃறீது
- ஐம்பது, தலைவன்
- ஔவை, வௌவால்
- போன்ம், மருண்ம்
சொல்லுக்கு முதல், இடை, கடையில் வரும் குறுக்கம்
- ஔகாரம்
- மகரம்
- ஆய்தம்
- ஐகாரம்
சொல்லுக்கு முதலில் வரும் குறுக்கம்
- மகரம்
- ஆய்தம்
- ஐகாரம்
- ஔகாரம்
ஆய்தக்குறுக்கம், மகரக்குறுக்கத்தின் மாத்திரை
- ஒன்று
- இரண்டு
- முக்கால்
- கால்
வரும் வண்டி என்பது
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு சேரும்போது.... ஆகத் திரியும்
- ஐகாரம்
- ஔகாரம்
- மகரம்
- ஆய்தம்
தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்
நையும், ஔவும் முதலற் றாகும் என்பது
- நன்னூல் 95
- நன்னூல் 96
- நன்னூல் 94
- நன்னூல் 59
ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கம் என்பவை...........
- முதலெழுத்துகள்
- சார்பெழுத்துகள்
- உயிர் எழுத்துகள்
- மெய்யெழுத்துகள்
No comments:
Post a Comment