Friday, August 14, 2015

ஒரு மதிப்பெண் வினாவிடை -3

காலாண்டு தேர்வுப் பகுதி
ஒரு மதிப்பெண் வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக / வினாவாக மாற்றுக
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  26
காலம் 45 நிமிடம்

1.        பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்....................
1.  திரு.வி.க    2. உ.வே.சா  3. பாவாணர் 
2.        இன்றைய மதுரையில்...................................தமிழ்ச்சங்கம் இருந்தது.
1.  மூன்றாம்  2.  இரண்டாம்  3. முதலாம்

3.        அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி
ஏற்படும் என்றவர்
1.  திரு.வி.க    2. பெரியார்  3. பாரதிதாசன்
4.        பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று.................இல்லை.
1.        வாக்குரிமை  2.  பேச்சுரிமை  3. சொத்துரிமை
5.        மும்பையில் அம்பேத்கர் சிறிதுகாலம்.............................பேராசிரியராகப் பணியாற்றினார்.
1.        வாணிகவியல்   2.  அறிவியல்   3. பொருளியல்
6.        அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய  விருது.......................
1.        பத்மஸ்ரீ  2. பாரத ரத்னா  3.  பத்ம விபூஷன்
7.        நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை.....
1.        ஓவியக்கலை  2.  இசைக்கலை  3. பேச்சுக்கலை
8.        மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர்...............
1.        பேரறிஞர் அண்ணா  2. மு.வரதராசனார்  3. திரு.வி.க
9.        பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்..
1.        திருவாசகம்  2. திருக்குறள் 3. தேவாரம்

வினாவாக மாற்றுக

                                                
10.     பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.
11.     பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார்.
12.     செய்திப் படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.
13.     திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளிஒலிப் படக்கருவி பயன்படுகிறது.
14.     தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
15.     தமிழர் மனித வாழ்வை அகம், புறம் எனப் பிரித்தனர்.
16.     மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது.
17.     தொடக்கம், இடைப்பகுதி, முடிவு பேச்சின் முக்கூறுகள்
18.     உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்
19.     இலெமூரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர்
20.     நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம்.
21.     இலக்கணம் வகுத்தபின்பே இலக்கியம் தோன்றியது
22.     தமிழர்கள் நிலத்தை ஆறுவகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
23.     நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைநத அரிய கலை பேச்சுக்கலை
24.     உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
25.     நடிப்புக் கலையையும் அரசியலையும் தம் இரு கண்களாக்க் கருதினார் எம்.ஜி.ராமச்சந்திரன்.

26.     திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமாகும்.

2 comments: